யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு

Jaffna Jaffna International Airport Nothern Province
By Theepan Aug 04, 2026 07:15 PM GMT
Report

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலானது இன்று(04.07.2026) வலிகாமம் - வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு

தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு

காணி உரிமையாளர்கள்

வலிகாமம் - வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, வலி. வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும் பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு | Development Of Jaffna Palaly Airport

அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை.

1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள் வழங்கப்படாத நிலையில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்

ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்

மீளக் குடியேற்ற நடவடிக்கை

மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம் தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில் பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.

குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு | Development Of Jaffna Palaly Airport

அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதையடுத்து மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டமை மக்களிடையே நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்

சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US