இந்திய உதவி திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தக் கூட்டம் நிகழ்ந்துள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றம், மாகாணப் பணப் பரிமாற்ற முறை குறித்த கலந்துரையாடல், அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகள், மாகாண வருவாய் இலக்குகளை அடைதல், கிழக்கு மாகாண சபைக்குள் உள்ள அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள திட்டங்களின் மீளாய்வு மற்றும் அவற்றில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின் தலையீடு போன்ற விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5