கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு : இருவர் தப்பி ஓட்டம்!
கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை (20.08.2026) மீட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கம்பிக்கூடுகள் - 22, நைலோன் வலைகள் - 160 மீற்றர் என்பன பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சான்றுகளை இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5