அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஐவர் பலி - மூவர் படுகாயம்
மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஐவர் மரணம்
உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவு! இலங்கையில் அடுத்த மூன்று நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம்