மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை சிதைக்கும் கட்சிகள்...! நாடாளுமன்றில் அர்ச்சுனா
ஊழல் குறித்து பல கோப்புக்களை சமர்ப்பித்துள்ள நிலையில் 6ஆவது ஊழல் தொடர்பான கோப்பை தற்போது சமர்க்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
40 வருடம் போரால் பாதிக்கப்பட்டு அழிந்த இனத்தை சில கட்சிகள் திரும்ப திரும்பவும் அழித்துக் கொண்டே இருக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் சோலர் பவர் என்ற திட்டம் 2024ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்தியாவினுடைய ஒரு கம்பனி முன்னின்றது.
எனினும் குறித்த கம்பனி வழக்குகள் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் திரும்பவும் அங்கு சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இந்த திட்டத்தை செயற்படுத்தினர்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, பூநகரி மக்கள் மின்சாரத்தை பெறுவதற்கு எவ்வளவோ கஷ்டப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |