ஐ.நா உச்சிமாநாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கானோர்
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, குறித்த இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட இந்தியக் குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
200 நாடுகளின் பங்கேற்பு
மேலும், தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் ஐ.நா.வின் காலநிலை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளனர்.
IS THERE NO WATER IN BRAZIL TO PUT THIS OUT ???
— 🇺🇸⭐️OUR-VOICES⭐️🇺🇸 (@iswho) November 20, 2025
HAUNTINGLY FAMILIAR TO PACIFIC PALISADES !! ??
A major fire has erupted at a climate change conference in Brazil. pic.twitter.com/ghfT89oPV1
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பது குறித்து கிட்டத்தட்ட 200 நாடுகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.