கைது செய்யப்படுவதனை தவிர்க்கும் முயற்சியில் தேசபந்து தென்னக்கோன்!
பொலிஸார் தம்மை கைது செய்வதனை தவிர்க்கும் முயற்சியில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பெற முயற்சி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள்
தற்போது மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிடிவிராந்து உத்தரவை செயலற்றதாக்க தேசபந்து தென்னகோன் முயற்சி செய்து வருவதாகவும், இது சட்டரீதியான போராட்டமொன்றாக இருக்கலாம் எனவும் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.
இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றம் 10 நாட்களுக்கு முன்பு தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
மாத்தறையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் சுற்றி வளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
