நாடாளுமன்ற வளாகத்தில் குழப்பம் செய்யும் நாய்கள்: கோபமடைந்த சபாநாயகர்
நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாய்கள் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தொந்தரவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தரவு
சபாநாயகர், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்தபோது, ஒரு நாய் தனது கால்களுக்கு அருகில் நடந்து செல்வதைக் கண்டு அச்சமடைந்து.

“இங்கே நாய் பூங்கா கட்டுகிறார்களா?” என்று கேட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து நாய்களை நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அகற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri