ராஜபக்ச குடும்பத்தை காட்டிக் கொடுத்த தேசபந்து! சிக்கப் போகும் பலர்
கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ ஹோம் அமைதியான போராட்டத்தின் போது ராஜபக்சவின் குண்டர்கள் நடத்திய தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் ராஜபக்ச குடும்பத்தையே காட்டிக் கொடுத்துவிட்டார் என அநுர தரப்பு ஆதரவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவின் உத்தரவு
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரிலேயே தான் செயற்பட்டதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் இதனைத் தெரிவித்து தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.
உண்மைகள் அம்பலம்
இலங்கை பொலிஸார் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தபோது, தேசபந்து தென்னகோன், பொது பாதுகாப்பு அமைச்சரை தவிர்த்து கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் செயல்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவும் விசாரிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய நிலையில் கோட்டாபய ராஜபக்சவை தேசபந்து தென்னகோன், காட்டிக்கொடுத்தமை போன்று மேலும் பல ராஜபக்சர்கள் காட்டிக்கொடுக்கப்படலாம். இதன்மூலம் பல உண்மைகள் அம்பலமாகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




