பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவர்: ஆனந்தசங்கரி கேள்வி
அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை
முதலில் சொல்லுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்
நாயகம் வீ.ஆனந்தசங்கரி (V. Anandasangaree) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து ஊடகங்களிற்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "தேடிவந்த வாய்ப்புக்களை நாங்கள் தவற விட்டுள்ளோம்.
இலங்கை வரலாற்றில் தென்னிலங்கைத் தலைவர் ஒருவர் சமஸ்டியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டபோது, வாக்களிக்க வேண்டாம் என தூண்டிய இப்பொழுதுள்ள கட்சிகள் தான் அப்பொழுதும் இருந்துள்ளன.
மக்களிற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் தகுதியோடு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |