அடுத்த மாதம் மின் கட்டண திருத்தம்
ஜூலை மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (04) மின்சார நுகர்வோர் கட்டண திருத்தப் பிரேரணையை இறுதி செய்வது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
இதன்போது செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் கொள்கை முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு வருடமும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, ஜூலை மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பான கட்டண முன்மொழிவு இந்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
