இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதிய ஜனதாக்கட்சி முன்னிலை
புதிய இணைப்பு
44 நாட்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் மக்களைவைத் தேர்தலில் சுமார் 1 பில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
அதன்படி, இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 64 கோடியே 20 இலட்சம் வாக்குகளுடன் உலக சாதனை பெற்றுள்ளதாக அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணியிடையே கடும் போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தற்போது வரையான நிலவரப்படி, ஜனநாயக தேசிய கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 228 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி, தி.மு.க 38 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆண்டு பா.ஜ.க ஒரு தொகுதியை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், இம்முறை முன்னிலையில் இருப்பது விசேட அம்சமாகும்.
நான்காம் இணைப்பு
இந்திய(India) முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் மதியம் 1 மணி நிலவரப்படி பாரதிய ஜனதாக்கட்சி 296 இடங்களிலும், இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதற்கு மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்கடிக்கு மத்தியில் வெற்றியை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் மக்களவை தேர்தல் வெற்றியை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தல் ஆணைய இணையத்தில் 11.45 மணிக்கு பகிரப்பட்ட தகவலின்படி உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிர கூட்டணி 43 இடங்களிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் இணைப்பு
இந்திய(India) மக்களவை தேர்தலின்முதல் சில சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 302 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 208தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் தரவுகளின்படி,கடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
New Update - 10:40
இரண்டாம் இணைப்பு
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 172 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
New Update - 09:26
முதலாம் இணைப்பு
இந்திய(India) மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.
பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 168 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 119 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் 13 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
You May Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |