2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தடகள போட்டி : வரலாற்றில் மிகப்பெரிய பணபரிசுதொகை அறிவிப்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தடகள போட்டியில் வரலாற்றில் மிகப்பெரிய பணபரிசுதொகையை சர்வதேச தடகள பேரவை அறிவித்துள்ளது.
உலக தடகள அல்டிமேட்சம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாதனையாளர்கள், டயமண்ட் லீக் வெற்றியாளர்கள் மற்றும் ஆண்டின் முன்னணி தடகள வீரர்கள் என பல்வேறு நாடுகளிலிலும் இருந்து வீரர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த போட்டித்தொடரில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0ISKKH
3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் குறுந்தூர ஓட்டப்போட்டிகள் நீண்ட தூர பந்தயங்கள் அஞ்சலோட்டம் நீண்டதூர ஓட்டப்போட்டிக்கு என அனைத்துவிதமான தடகளப்போட்டிகளும் நடைபெறவுள்ளன.
மிகப்பெரிய நட்சத்திரங்களை கொண்ட போட்டி
அமர்வுகளில் நடைபெறும் மற்றும் ஸ்பிரிண்ட்ஸ், நடுத்தர மற்றும் நீண்ட தூர பந்தயங்கள், ரிலேக்கள், தாவல்கள் மற்றும் வீசுதல்களை உள்ளடக்கியது.
2026 செப்டம்பர் 11 முதல் 13 வரை ஆரம்ப போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதன் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நடத்தப்படும் நகரங்கள் முடிவு செய்யப்படபடும் என சர்வதேச தடகள பேரவை அறிவித்துள்ளது.
தடகள தொடரின் மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கொண்ட இந்த போட்டியானது ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |