திருகோணமலையில் ஆரம்ப பிரிவு கட்டிடம் பிரதியமைச்சரால் திறந்து வைப்பு
நாமும் இன்னும் பலரை இங்கிருந்து நாசாவுக்கு அனுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று (01.02.2026) திருகோணமலை- தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவு திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு, அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.
திறப்பு விழா
பழைய சந்தை கட்டிட தொகுதி சுமார் 30 வருட கால குத்தகைக்கு எடுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு குறித்த ஆரம்ப பிரிவின் கட்டிடங்கள் திருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கல்வியினை மேம்படுத்தி வகுப்பறை பற்றாக்குறையை நீக்கும் முகமாகவும் மாணவர்களின் கல்வி திறன் வசதியை மேம்படுத்தும் முகமாக குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த திறப்பு விழாவில், திருகோணமலை மாநகர சபை மேயர் க. செல்வராசா (சுப்ரா) கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், “ இந்த உலகத்தில் அழிக்க முடியாத செல்வம் கல்வி மட்டும் ஒரு போதும் அழியாது பணம் இருந்தால் கண்முன்னே அழிந்து போகும். ஆகவே, இந்த மாணவர்களுக்கு கல்வியை புகட்ட வேண்டும் கல்வியை புகட்ட அடிப்படை வளங்கள் தேவை.
நவீன கல்வி முறைக்கேற்ப சகல வசதிகளையும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். மேலும், ஆசிரியர் தொழில் என்றில்லாமல் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்கும் முயற்சிக்க வேண்டும் இங்குள்ள இரு பிள்ளைகளாவது நாசாவுக்கு செல்ல வேண்டும் அதுவே பெருமை தமிழ் நாட்டு மாணவிகள் பலர் நாசாவில் உள்ளார்கள். நாமும் இன்னும் பலரை இங்கிருந்து நாசாவுக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri