தைப்பூசத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குடப் பவனி
தைப்பூசத்தை முன்னிட்டு இணுவில் கந்தசாமி ஆலயத்தில் மாபெரும் பாற்குடப் பவனி இன்று(1.2.2026) காலை இடம் பெற்றது.
மருதனார் மடத்தில் ஆரம்பித்த பாற்குடப்பவனி காங்கேசன்துறை வழியாக சென்று இணுவில் கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடைந்தது.
அத்துடன் தைப்பூசத்தினை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வு ஆலயத்தில் இடம் பெற்றதுடன் பாற்குடம் ,பாற்காவடி ,பறவைக்காவடி உள்ளிட்ட காவடிகளுடன் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

மகா கும்பாபிஷேக பெருவிழா
திருவருள்மிகு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இன்று (01.02.2026) ஐந்தாவது மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.
இதன்போது, ஆயிரக்கணக்கான அடியவர்கள் குடை சூழ குரு முதல்வர்களின் பாராயணம் பாட திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் மற்றும் ஏனைய பரிபாரண மூர்த்தி களுக்கும்மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
நெற்புதிர் எடுத்தல்
விவசாயிகள் அறுவடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் தைப்பூசத்தினை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான புதிர் எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் இன்று காலை "நெற்புதிர் எடுத்தல்" நிகழ்வானது ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ த.றதன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வயலுக்கு முன்னாள் உள்ள வடுகனை வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாட்டுடன் நெற் புதுர் எடுத்தல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.





சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam