உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு:பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் திடீர் விலகல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் 24 பிரதிவாதிகள் சார்பாகப் வாதாடிய சட்டத்தரணிகள், விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் காரணம் காட்டி விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாமுக்கு இவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள காரணங்கள்
குற்றம் சாட்டப்பட்ட 24 சந்தேக நபர்களை கூட்டாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கே.எஸ். ரத்னவேல், எச். கசாலி ஹுசைன், ருஷ்டி ஹபீப் மற்றும் நிரஞ்சன் சிறிவர்தன ஆகிய நான்கு சட்டத்தரணிகளும், ஜனவரி 22 அன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தங்கள் வாடிக்கையாளர்களை அணுகுவதில் வரம்புகள் மற்றும் அவர்களிடமிருந்து தெளிவான மற்றும் விரிவான தகவல்களை பெறுவதில் உள்ள சிரமங்கள் போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி, பிரதிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர்ப்பதாக அமர்வுக்குத் தெரிவித்துள்ளனர்.
23,269 குற்றங்களுக்காக சட்டமா அதிபரால் குற்றம் சாட்டப்பட்ட 24 நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் உருவாக்கப்பட்டது.

சுமார் 23,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 2190 பேர் அதிகாரப்பூர்வ சாட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam