நாட்டை விட்டு வெளியேறும் ஜூலி சங்.. பாற்சோறு உண்டு கொண்டாடிய கம்மன்பில
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக அமெரிக்கா செல்லத் தயாராகி வரும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கின் வெளியேற்றத்தை உதய கம்மன்பில பகிரங்கமாக கொண்டாடியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஜூலி சங்கின் வெளியேற்றத்தை பால் சோறு உண்டு வெளிப்படையாகக் கொண்டாடியுள்ளார்.
பதவிக்கால நிறைவு
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், "ஜூலி சுங் இலங்கைக்கு 4 ஆண்டுகளாக ஒரு சாபக்கேடாக இருந்ததாகவும், அவரது விலகலைக் கொண்டாட நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து, தம்புருகள் இசைக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இலங்கைத் தூதர் ஜூலி சங், இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கைக்கு ஜூலி சங் அளித்த ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளதுடன் தனது சேவைக் காலத்தில் தூதர் ஆற்றிய பணிகளை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri