பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகளை வழங்கி துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
சிலாபத்தில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை வழங்கி துஷ்பிரயோகம் செய்த மருந்துக்கடை உரிமையாளரும் அவருக்கு ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களை நிர்வாணமாக படம்பிடித்தாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிலாபம் பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வரும் இந்த நபர், மருந்து விற்பனை செய்யும் போர்வையில் தனது சகோதரரான மருத்துவரின் உதவியுடன் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போதை மாத்திரைகள்
சோதனையின் போது, சந்தேக நபரிடம் இருந்த காரில் 571 போதை மாத்திரைகள் மற்றும் 11,760 மில்லிகிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் இளம் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருட்களை வழங்கி, அவர்களை நிர்வாணமாக்கி, ஆபாச வீடியோக்களை படம்பிடித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது சிறிது காலமாக மிகவும் உன்னிப்பாக செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் சிலாபம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அங்கு அவர் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுக்கும் அடிமையாகி இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் மருத்துவர் மற்றும் பிற தரப்பினர் குறித்து சிலாபம் பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சந்தேக நபர்களும் வழக்குப் பொருட்களும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.