டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக தொடருந்து பாதைகளை மீள் கட்டமைக்க நடவடிக்கை
டிட்வா சூறாவளியினால் மலையக தொடருந்து பாதைகள் பாரியளவில் சேதமடைந்திருந்த நிலையில் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சூழலில் இலங்கை தொடருந்து திணைக்களம் கட்டம் கட்டமாக மலையகத்திற்கான தொடருந்து சேவையினை ஆரம்பித்து வருகின்றன.
கடந்த காலங்களில் அம்பேவல தொடக்கம் பதுளை வரையிலான தொடருந்து சேவையும், நாவலபிட்டி தொடக்கம் வட்டவளை வரையான தொடருந்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலர் பாதிப்பு
எனினும் கொழும்பிற்கும், பதுளைக்கும் இடையிலான தொடருந்து சேவை இல்லாமையினால் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தொடருந்து பாதையினை சீர் செய்து தொடருந்து பயணங்களை ஆரம்பிக்குமாறு மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தொடருந்து திணைக்களம் பாதிக்கப்பட்ட புகையிரத வீதிகளை சீர்த்திருத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளில் அம்பேவல பகுதியிலும், ஹட்டன் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam