'டித்வா'சூறாவளி! முன்கூட்டிய அறிவிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு சூறாவளி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அத்தியட்சகர் எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் - நவம்பர் காலப்பகுதி
இலங்கைக்கு ஒக்டோபர், நவம்பர் மாதக் காலப்பகுதி 2ஆவது தென்மேற்கு பருவ பெயர்ச்சி காலம் என்பதால் மழை வீழ்ச்சி அதிகமாவது சாதாரணமாகும். அத்தோடு சூறாவளி மற்றும் தாழமுக்கம் ஏற்படும் காலமாகும்.
நவம்பர் 12ஆம் திகதி ஆகும்போது வங்காள விரிகுடாவில் தாழமுக்க வலயம் ஒன்றே உருவாகியிருந்தது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அத்தியட்சகரும் வங்காள விரிகுடாவில் தாழமுக்க வலயம் ஒன்று உருவாகியுள்ளதால் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் எனவே அறிவித்திருந்தார்.
நாங்கள் அந்த காலப்பகுதியில் சூறாவளி ஒன்றை காணவில்லை. சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்க முடியுமே தவிர, சூறாவளி ஏற்படுவதாக அறிவிக்க முடியாது என்றார்.
நவம்பர் 12ஆம் திகதி ஏற்பட்ட தாழமுக்கம் இரண்டாக உடைந்து 'சென்யா'என்ற பெயரில் சூறாவளியாக இந்தோனேசியா மற்றும் மலேசியா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதை கருத்தில் கொண்டு 22 ஆம் திகதியிலிருந்து அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என அறிவித்தோம் என சுட்டிக்காட்டினார்.
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri