ஆபத்தான நிலைமை தொடர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை
உயர்ந்து வந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்தான நிலைமை இன்னும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, களனி கங்கையின் நீர்மட்டத்தில் நேற்று இரவு குறைவு காணப்பட்டது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சமீபத்திய அறிவிப்பிற்கமைய, அதன் நீர்மட்டம் 8.1 அடி வரை குறைந்துள்ளது.
எனினும் களனி கங்கையின் ஹன்வெல்ல நீர்மாணிக்கமைய, இன்னும் ஒரு சிறிய வெள்ள நிலைமை உள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம்
அதே நேரத்தில் நாகலகம்வீடிய நீர்மானிக்கமைய, நீர்மட்டம் பெரிய வெள்ள மட்டத்தில் உள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, வெலேவத்த, அம்பகஹ சந்தி, அங்கொட, அம்பதலை, வெலிவிட்ட, நவகமுவ, ஹங்வெல்ல உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் அவற்றின் பக்கவாட்டு வீதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் 42,655 குடும்பங்களை சேர்ந்த 170,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா தெரிவித்தார்.
17 தங்குமிடங்கள்
மேலும், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் ஜா எல பிரதேச செயலாளர் நிலங்க குணவர்தன கூறுகையில், பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 17 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகள், திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர்ப்பாசனத் துறையால் வெளியிடப்பட்ட வெள்ள எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொலன்னறுவை - மனம்பிடிய, சோமாவதிய புனித தலத்தைச் சுற்றியுள்ள பகுதி, கல்லெல்ல உள்ளிட்ட பல பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
இதே வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டை சுத்தம் செய்வதற்காக 10,000 ரூபாய் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam