பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2023.08.28. மற்றும் 2023-08-29ஆம் திகதிகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறையில் செல்ல அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி, கடந்த 2023.08.18ஆம் திகதி ஆரம்பமானது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 2023.08. 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பா் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |