தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய்.. வைத்தியசாலை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலை அமைப்பால் நோயாளிகளைக் கையாள முடியாத ஒரு நிலை ஏற்படக்கூடும் என்று பிரதி அமைச்சர் ருவன் செனரத் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட அதிகம்..
கடந்த ஆண்டு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், வைத்தியசாலை வசதிகளின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு கடுமையான பிரச்சனையாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5,466 டெங்கு நோயாளிகள் பதிவாகினர். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை (ஜூன் 21 வரை) நாடு முழுவதும் 13,338 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.