பொது சுகாதார பரிசோதகர்கள் போன்று வரும் கொள்ளையர்கள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை முழுவதும் பல்வேறு பிரசேதங்களில், பொது சுகாதார பரிசோதகர்கள் போன்று வேடமிட்டு பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நபர்கள் குறித்த ஏராளம் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறித்த அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளில் வசிப்பவர்களை தவறாக வழிநடத்தி சட்டவிரோதமாக பணம் பெறும் பல சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளது.

தற்போதைய டெங்கு தொற்றுநோய் சூழல் தொடர்பாக வீடுகளை பரிசோதிக்கும் கடமைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தொடர்பில் இந்தப் பணக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும் ஒரு பொது சுகாதார பரிசோதகர் தனது கடமைகள் தொடர்பாக எந்தக் காரணத்திற்காகவும் பணம் வசூலிக்கவோ பெறவோ மாட்டார் என்று வலியுறுத்திக் கொள்கின்றோம்.
இதன்படி, பொது சுகாதார பரிசோதகருக்கோ அல்லது அவ்வாறு காட்டிக்கொள்பவர்களுக்கோ பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பபடுகின்றனர்.
மேலும், பொது சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு அல்லது அவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டு யாரேனும் தங்கள் பணி தொடர்பாகப் பணம் கேட்டால், பொலிசாருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மாஸ்டர் பிளான்! அரசாங்கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இரகசிய தகவல்