டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு
நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
அதேநேரம், ஜூலை மாதத்தின் முதல் 9 நாள்களில் மட்டும் 10,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் நேற்று(10) ஒரே நாளில் சுமார் 1,110 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போது பல முக்கிய மருத்துவமனைகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக சுகாதாரக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 5 மணி நேரம் முன்
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri