பேசுபொருளாகிய நீண்ட தலைமுடி - பச்சைகுத்தும் விவகாரம்.. நீதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நீண்ட முடி வைத்திருப்பவர்கள் மற்றும் உடலில் பச்சைக் குத்தியவர்களை (Tattoo) பொலிஸார் கைது செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர், இன்று (20.10.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத்தின் மூலம் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக முகப்புத்தகத்தில் பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டங்கள்
மேலும், சாதாரண பொதுமக்களை இலக்குவைத்து இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

”நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல், கடத்தல்கள் மற்றும் கொலைக் குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காகவே இப்புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அரசாங்கத்தின் புதிய சட்டங்களை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார விடயத்தை தமிழீழ விடுதலை புலிகளுடன் கோர்த்து விடும் பயங்கர சதி! திரைமறைவில் செயற்படும் அரசியல் பலம்...
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri