தொடர்ச்சியாக 42 மணிநேரம் நீர்வெட்டு - நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு..!
ஹரிஸ்பத்துவ மற்றும் பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணி முதல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை 42 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
42 மணி நேர நீர்வெட்டு
01. மெடவெல (பழைய) சேவை நீர்த்தேக்கம்: கெவும்கொஹே வீதி, கோனிகொட, ஜெயந்தி வீதி, குருக்கேவே, பால்கும்புர, இடமேகம, அரம்பேகம, கொரொக்கஸ் அங்கா வீதி, எலமல்பத்த, கொட்டுதென்ன, பெத்தியகொடவத்த, கலுவன, போத்தட்ட, ஹரங்கஹதென்ன, டொடம்தென்ன, கும்புரகெதர, தெம்பரலோவ, திப்புத்த மற்றும் தலப்பெல்லகொட வீதி.

02. மெதவெல (புதிய) சேவை நீர்த்தேக்கம்: பதுகொட, எஹலகசின்ன, தித்தெனிய, ஒவிசா, வதகொட, தொம்பகம்மன, ஹதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்கஹட, பொக்காவல, வலதென்ன மற்றும் பதிரட.
03. கல்லென வத்த பிரதேசம்: கல்லனவத்த மற்றும் பான் அங்க.
04. கலகெதர பிரதேசம்: கலகெதர, வெமட, போயகொட சுற்றியுள்ள பகுதிகள், ரம்புக்கன வீதி, பொஹொலியத்த வீதி மற்றும் குருநாகல் வீதி.
05. மாவத்தகம பிரதேசம்: மாவத்தகம, பரந்தன வீதி, ரம்புக்கன வீதி, பரகஹதெனிய, யடிவில, மில்லவ மற்றும் பிலஸ்ஸ.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர் விநியோகத் தடையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இந்த காலப்பகுதியில் சேகரிக்கப்படும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பலருக்கு அநுர மன்னிப்பு வழங்கியுள்ளார்: சம்பிக்கவின் பரபரப்பு குற்றச்சாட்டு