நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பலருக்கு அநுர மன்னிப்பு வழங்கியுள்ளார்: சம்பிக்கவின் பரபரப்பு குற்றச்சாட்டு
நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட சுமார் 300 பேருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக செயற்படுவதில்லை என ஜனாதிபதி கூறிய போதிலும், தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை
கடந்த 2025ம் ஆண்டிலும் இந்த ஆண்டிலும் ஜனாதிபதி இவ்வாறு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டாம் எமது சட்டமே அமுல்படுத்த வேண்டுமென கூறியிருந்தார்.
இது போன்றே ஜே.பி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
களனளிவெலி பகுதியில் வீடுகளை அகற்றுவது தொடர்பில் நீதிமன்ற உத்தரவினை மதிக்க வேண்டாம் என லக்மாலி கூறியிருந்தார் என்பதுடன் ரில்வின் சில்வா நிலக்கரி மோசடியிலிருந்து தங்களது கட்சி உறுப்பினர்களை மீட்கவே ஆணைக்குழு நிறுவப்பட்டது என்ற அடிப்படையிலான கருத்தை வெளியிட்டிருந்தார் எனவும் இது குறித்து அநுர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஹிம்சை வழியில் போராட்டம்
இவ்வாறு நீதிமன்றை அவமரியாதை செய்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தண்டிகக்ப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகா சங்கத்தினர் அஹிம்சை வழியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது ஜே.வி.பி உறுப்பினர்களைக் கொண்டு வன்முறை பிரயோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விஹாரமஹாதேவி பூங்காவின் கழிப்பறை வசதிகளை மாநகரசபையின் மேயரைக் கொண்டு முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் ஜே.வி.பி. 560 போராட்டங்களை நட்த்தியதாகவும் அவற்றுக்கு எதிராக அப்போதைய அரசாங்கம் அடக்குமுறைகளை பயன்படுத்தவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam