இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் : 4 மரணங்கள் பதிவு
இலங்கையில் மேலும் நான்கு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நான்கு இறப்புகளை அடுத்து இறப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின்படி, நேற்று (02.07.2023) வரை 49,559 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு தொற்றுகள் பதிவு
இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் 24,730 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
மேலும், ஜூன் மாதத்தில் 9,916 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது ஜனவரி 2023 க்குப் பின்னர் ஒரு மாதத்திற்குள் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அகற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |