யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு
யாழ்ப்பாணத்தில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம் (14.10.2024) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2024.10.13ஆம் திகதி முதல் 2024.10.15ஆம் திகதி வரையான டெங்குக் கட்டுப்பாட்டு களப்பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்கு அமைவாக, அனைத்து அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில், அந்த பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு கருத்துரை
இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான அறிமுகம், டெங்கு நோயின் தற்போதைய நிலைமை, டெங்கு நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு நோய் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரனால் விழிப்புணர்வு கருத்துரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 55 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
