கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கீழ்மட்டத்தில் உள்ளது: போராட்டகளத்தில் மக்கள் (Video)
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி திரியாய் சந்தியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு விலக வேண்டும் என கோரி இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“தாங்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் கீழ்மட்டத்தில் காணப்படுவதாகவும், அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தங்களுக்குப் பல விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தமக்குரிய விவசாயத்தைச் செய்ய முடியாத நிலை தோன்றி உள்ளதாகவும்” ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
“கோட்டா கோ கோம்“, “திருடிய டொலரை மக்களுக்கு வழங்கு“,“ அத்தியாவசிய பொருட்களின் விலையைக்
குறை“ போன்ற கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.