நாங்கள் கேட்பது இழப்பீடுகளை அல்ல: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆதங்கம்
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (29) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுதுடன் ஆர்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் பங்குபற்றியிருந்தார்கள்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
அத்துடன் “உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்?”
“காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும், அச்சுறுத்துத்துவதையும் நிறுத்துங்கள்”, நாங்கள் கேட்பது இழப்பீடுகளையோ மரணச்சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையையே! என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வடக்கு - கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இம்மாதம் 24ஆம் திகதி முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி அவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
