தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள திகதியில் எவ்வித மாற்றமுமில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பேருந்து தரிப்பு நிலைய வளாகத்தில் நேற்று (28.07.2024) நடைபெற்ற ‘ஜெயகமு ஸ்ரீலங்கா’ கொழும்பு மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரதும் கடமை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தேர்தல் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கம். அதனை மீற இடமளிக்க முடியாது.

அத்துடன், அரசியலமைப்பின் 106ஆவது சரத்தின் பிரகாரம், நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், அதற்கு பூரண ஆதரவை வழங்குவது அனைவரினதும் முக்கிய கடமை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri