கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (05-01-2024) கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுண்ணக்கல் அகழ்வு
மேலும், சீமெந்து உற்பத்திக்கான சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு எதிராக பூநகரி பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்தே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய முன்னணியினர் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |