கெஹல்பத்தர - சலிந்தவைப் பிடிக்க ஏழு நாள் காத்திருந்த ஷானி அபேசேகர
கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இரகசிய நடவடிக்கை வெற்றியளித்துள்ளததாக பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல முக்கிய பாதாள உலக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதன் மூலம் குறித்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேசிய பொலிஸாருடன் ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு நடவடிக்கையின் விளைவாக, கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, பாக்கோ சமன்(மித்தெனிய மூவர் படுகொலை குற்றவாளி) மற்றும் தம்பரி லஹிரு உள்ளிட்ட ஆறு நபர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.
பல சர்ச்சைக்குரிய குற்றங்கள்
கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து நாட்டில் பல சர்ச்சைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு நீதவான நீதிமன்ற வளாகத்தில் 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மற்றும் முன்னாள் இராணுவ வீரர் கமாண்டோ சாலிந்தா ஆகியோர் முக்கிய சந்தேக நபர்களாக உள்ளனர்.
மேலும், பாணந்துறை பகுதியில் பல பாதாள உலக மோதல்களில் தொடர்புடைய பாணந்துறை நிலங்கா மற்றும் மித்தேனியாவில் இளம் குழந்தைகள் முன்னிலையில் கஜ்ஜா என்பவரை கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
ஜூலை மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் பரவியிருந்தாலும், பின்னர் அவர்கள் இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றதாக தெரியவந்தது.
அதன்படி, இந்த நடவடிக்கையில் எந்தவித ஆயுத மோதல்களும் இல்லாமல் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுகளும் ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள்
இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்ந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் அந்த உறவுகளை முறித்துக் கொண்டதாகவும் கூறினார்.
பாதாள உலகத்துடனும் அவர்களின் சொத்துக்களுடனும் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்தும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சட்டப்பூர்வமாக நாட்டிற்கு கொண்டு வர இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்னணியில் தற்போதைய கைது நடவடிக்கை இலங்கை பாதுகாப்பு துறையின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடுகளில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் சமீப காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் நிகழும் துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளில், சந்தேகிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட பல உயர்மட்ட நபர்கள் குறிவைக்கப்பட்டனர்.
டான் பிரியசாத்
சர்ச்சைக்குரிய நபரான டான் பிரியசாத் ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார் .
மேலும் 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் நாட்டில் மற்றும் மார்ச் 31, 2025 க்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 238 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் மாத்திரம், 87 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதன் விளைவாக 47 இறப்புகள் மற்றும் 50 காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் மற்றும் இந்த ஆண்டு இதுவரை நடந்த கொலை அலையின் இடங்களைக் காட்டுவது தொடர்பில் வரைபடத்தை ஆராயும்போது வெளிப்படும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மாகாணத்திலும் தெற்கு மாகாணத்திலும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் அதிக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அம்பலாங்கொடை காவல் பிரிவு மற்றும் அஹுங்கல்ல காவல் பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளின் தரவுகளை ஆராயும்போது, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 81 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், தற்போதுவரை 87ஆக காணப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகிறது, இது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு முக்கிய காரணம் போட்டியாளர்களான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
பழைய பகைமை
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுக்கு இடையேயான பழைய பகைமைகளின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறுகள், மனக்கசப்பு மற்றும் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நாட்டை விட்டு வெளியேறி துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களால் நடத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு பிடியானைகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புகள் தெரிவிக்கின்றன.
துபாய் போன்ற நாடுகளை தளமாகக் கொண்ட பிற குற்றவாளிகள் இந்த நாட்டில் கொலைகளைச் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
