இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் வெளிநாட்டில் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் உள்ளிட்ட 6 பேர் நேற்று(27) மாலை இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டோ சலிந்த என்ற பெயரில் அறியப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற ஐவரில் ஒருவர் 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த', 'பெக்கோ சமன்' மற்றும் 'நிலங்க' ஆகியோர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகிய இருவரும் கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தின் உள்ளே வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலையின் சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri