சிலிண்டர் சின்னத்தில் ரணிலுக்கு நாடாளுமன்ற பதவி! முன்னாள் எம்பி கருத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வரும் காலம் கணிந்துள்ளதாகவே தோன்றுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு இருவர் தெரிவாகியுள்ளனர்,அவர்களில் ஒருவர் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுப்பார்கள் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பதவி
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை கொண்டு ஒன்றிணைந்த கூட்டணியாக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெற்றன.
நேற்று சட்டத்தரணியான எனக்கு கூட நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை.நீதிமன்ற நுழைவாயில் மூடப்பட்டிருந்தது.
நிர்வகிக்கும் சர்வாதிகாரி நினைத்த மாதிரி பொலிஸார் செயற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜயநாயகத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய தலைவர் ரணில்இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திற்கு அவர் வருவது உசிதமானதாகும்.
நாடாளுமன்றம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri