சாணக்கியனின் 400 மில்லியன் மோசடி! அம்பலப்படுத்திய அர்ச்சுனா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட போதே அன்ரனிசில் ராஜ்குமார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
எனவே அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பு ஏற்படுத்தினேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அபிவிருத்திக்காக அவருக்கு 400 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கினார்.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
