கொழும்பில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்
கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த 2 தகாத விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவின் எம்புல்தெனிய மற்றும் ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை பகுதிகளில் நேற்று அதிகாலை இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனையின் போது அங்கு பணியாற்றிய இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் கைது
சந்தேக நபர்களான ஆண்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட தெய்யந்தர மற்றும் ராஜகிரியராகம பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
சந்தேக நபர்களான பெண்கள் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இரத்மலானை மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
