வடக்கில் தாண்டவமாடும் டெல்டா தொற்று
இலங்கையில் 95.8 சதவீத கோவிட் தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்திய போது 113 பேர் டெல்டா திரிபினாலும், 10 பேர் அல்பா திரிபினாலும் பாதிக்கப்பட்டமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் நுண் உயிரியல் துறையினால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது.
பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் மருத்துவர் சந்திம ஜீவந்தர ஆகியோரால் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாகாணத்திலும் டெல்டா வைரஸ் திரிபு 84 முதல் 100 சதவிகிதம் வரை பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 881 பேரின் மாதிரிகளில் 592 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளமை தெரியவந்துள்ளது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri