திடீரென வேலையை விட்டு சென்ற உயர் பொலிஸ் அதிகாரி - தகவல் புத்தகத்தில் சிக்கிய முக்கிய ஆதாரம்
கடுமையான வேலைப்பளு காரணமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணியை விட்டுச் சென்றுள்ளார்.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் பணி தொடர்பான அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது.
பணி அழுத்தம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்தவர், தனது பணியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பணி அழுத்தத்தை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு, பொலிஸ் தகவல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிவு செய்த பின்னரே குறித்த பொலிஸ் பரிசோதகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்கிஸை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகரவின் உத்தரவின் பேரில், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் தகவல் புத்தகத்தில் இருந்த குறிப்பு
குறித்த அதிகாரியின் இந்தச் செயல், ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கரிசனையை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் குறித்த பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20