டின் மீன்களின் விலை தொடர்பில் விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(05.09.2026) வெளியாகியுள்ளது.
டின் மீன்களின் விலை அதிகரிப்பு
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவின் கீழ் செயற்பட்டு, எந்தவொரு உள்நாட்டு உற்பத்தியாளரோ, பொதியிடுபவரோ, விநியோகஸ்தரோ அல்லது வர்த்தகரோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் வகைகளை குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதோ, விற்பனைக்காக முன்வைப்பதோ அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20