பதப்படுத்தப்பட்ட டின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி
நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 5.4 மெட்ரிக் தொன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டிற்கான பதப்படுத்தப்பட்ட மீன் இறக்குமதி 99.8% குறைந்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வீழ்ச்சி
கடந்த ஆண்டுகளின் புள்ளிவிபரங்களை நோக்கும்போது 2021இல் 8,758.1 மெட்ரிக் தொன்களும், 2022இல் 434.0 மெட்ரிக் தொன்களும், 2023இல் 7,904.4 மெட்ரிக் தொன்களும், 2024இல் 4,476.0 மெட்ரிக் தொன்களும் மற்றும் 2025இல் 601.1 மெட்ரிக் தொன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

2025இல் தொடங்கிய இறக்குமதிகளின் சரிவுப் போக்கு தொடர்ந்ததுடன், 2026 ஜனவரி - மே மாதங்களில் அது 5.4 மெட்ரிக் தொன்களாகக் கடுமையாகச் சரிந்தது.
இறக்குமதி செய்யப்படும் அளவுகளில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட மீன்களின் அந்நியச் செலாவணிச் செலவும் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri