எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட் தீர்மானங்களை அறிவித்தார் யாழ். மாவட்டச் செயலாளர்

Fuel Price In Sri Lanka Jaffna Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Theepan Jul 23, 2022 07:20 AM GMT
Report

எரிபொருள் விநியோகம் தொடர்பிலான சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதம கணக்காளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. 

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட் தீர்மானங்களை அறிவித்தார் யாழ். மாவட்டச் செயலாளர் | Decisions Taken Related To Fuel Distribution

எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. எரிபொருள் விநியோகத்திற்காக வழங்கப்பட்டுள்ள வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு நிற அட்டைகளை பரிசீலிப்பதுடன் தேசிய திட்டத்தின் பிரகாரம் வாகனத்தின் இறுதி இலக்கத்தினை பரிசீலித்து சுகாதாரத் துறையினர் உட்பட அனைவருக்கும் ஒரே வரிசையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், எரிபொருள் அட்டை விநியோகம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பின் அதனை உறுதிப்படுத்தி ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டையினை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் வரை QR code உடன் இணைந்த வகையில் எரிபொருள் அட்டையிலும் விநியோக பதிவு மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

2. திணைக்கள வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் என்பவற்றுக்கான எரிபொருள் கட்டளை மூலம் எரிபொருள் பெறும் இடத்தில் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரச, தனியார் நோயாளர் காவு வண்டிகளுக்கு இலங்கை போக்குவரத்துச்சபையினூடாகவும் எரிபொருள் விநியோகிக்க முடியும்.

3. ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் இடத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது அயல் பிரதேச செயலகத்தில் முன்கூட்டியே அனுமதியினை பெற்று எரிபொருளினை இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட் தீர்மானங்களை அறிவித்தார் யாழ். மாவட்டச் செயலாளர் | Decisions Taken Related To Fuel Distribution

4. வெளிநாட்டுக்கு செல்வதற்காக டீசல் பெறவுள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளரிடம் அனுமதியினை பெற்று அந்த வாகனத்திற்குரிய இறுதி இலக்க தினத்தன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

5. வெளிமாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமையாற்றுபவர்கள் பெயர், விபரங்களை திணைக்களத்தினூடாக சமர்ப்பித்து உரிய பிரதேச செயலாளரிடம் அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.

6. வெளிமாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றுபவர்கள் பெயர், விபரங்களை திணைக்களத்தினூடாக சமர்ப்பித்து மாவட்டச் செயலகத்தில் தமக்குரிய அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட் தீர்மானங்களை அறிவித்தார் யாழ். மாவட்டச் செயலாளர் | Decisions Taken Related To Fuel Distribution

7. பல்கலைக்கழகம், உயர் தொழிநுட்ப நிறுவனம், தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றில் கல்வி கற்கின்ற வெளியூர் மாணவர்களுக்கு துறைத் தலைவரின் திணைக்களத் தலைவரின் உறுதிப்படுத்தலுடன் கடிதம் பெற்று பிரதேச செயலாளரிடம் வெள்ளை நிற விநியோக அட்டை பெறமுடியும்.

8. விவசாயிகள், பேக்கரிகள், வாழ்வாதார தேவைகள், மின்பிறப்பாக்கிகள் என்பவற்றுக்கான எரிபொருள் விநியோகம் பிரதேச செயலாளரால் விநியோகிக்க முடியும்.

9. வணிகர் கழகத்தின் ஊடாக அத்தியாவசிய உணவு விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட் தீர்மானங்களை அறிவித்தார் யாழ். மாவட்டச் செயலாளர் | Decisions Taken Related To Fuel Distribution

10. வியாபார காரணங்களுக்காக எரிபொருள் கோரும் நிறுவனங்கள் யாவும் வணிகர் கழகத்தின் சிபாரிசினை பெற்றுக்கொண்டு குறித்த நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

11. பிரதேச செயலாளர்கள் அவர்களின் பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்புநிலைய முகாமைத்துவத்தினர் ஆகியோரை அழைத்து சரியான அறிவுறுத்தல்களை வழங்கி எரிபொருள் விநியோகத்தினை சீராக வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

12. டீசலுக்கான கோரிக்கையினை கிடைக்கும் எரிபொருள் அளவினைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலாளர்களே தீரமானித்து வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US