நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR குறியீட்டைப் பெறுவதற்கு http://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை (ICTA) பொதுமக்களுக்கு இன்று இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது அறிவிப்பை வெளியிடும் போது, தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத தளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ICTA தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR குறியீட்டை வழங்கும் அதிகாரத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
இதேவேளை, இன்று (21ஆம் திகதி) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, ஆரம்ப தொழில்நுட்ப சிக்கல்களுக்கு பின்னர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR அமைப்பு இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.