தேசிய எரிபொருள் அனுமதி தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆரம்ப தொழில்நுட்ப சிக்கல்களுக்கு பின்னர் FuelPass QR அமைப்பு இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
FuelPass QR அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் தேசிய அளவில் இந்த திட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Great work by the @MoYS_SriLanka volunteering to assist the National Fuel Pass initiative. Members & Volunteers of National Youth Council & National Youth Corps engaged in the registration process & educating the public on the program at Fuel stations islandwide. Thank you ?? pic.twitter.com/PAZS22AlZU
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 21, 2022
1) After initial technical issues, FuelPass QR system was successfuly tested today. Pilot project will continue before going national next week. Last Digit Number plate Fuel Quota will ease the fuel lines in the next few days with distribution speeding up islandwide.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 21, 2022
இதற்கமைய, வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தேசிய இளைஞர் பேரவை மற்றும் தேசிய இளைஞர் படையின் உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்வோரின் விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.