இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி - பெருந்தொகை வைத்தியர்களின் முடிவால் பாதிப்பு
வெளிநாடுகளில் நிபுணத்துவ பயிற்சி பெற்று வரும் சுமார் 700 வெளிநாட்டு வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 500 இளம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமையின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.
நிலையான அரசாங்கக் கொள்கை இல்லாமையினால் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் வெளிநாடுகளில் இந்த வைத்தியர்களுக்கான அதிக தேவையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்களின் சேவைக் காலம் 60 வருடங்களாக வரையறுக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டமை வைத்தியர்கள் இந்த தீர்மானம் எடுக்க முக்கிய காரணம் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
