எல்லை மீறும் அர்ச்சுனா எம்.பியின் வார்த்தை பிரயோகம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆண், பெண் என்ற எந்த பாகுபாடுகளுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மொழி ஊடக இணைப்பாளர் தா.க ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் மனு ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அர்ச்சுனா எம்.பி முஸ்லிம் மக்கள் தொடர்பில் மிக மோசமாக பேசியுள்ளதாகவும் மீண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் இவருடைய வார்த்தை பிரயோகங்கள் எல்லை மீறியுள்ளதுடன் நாடாளுமன்றத்துக்கான மரியாதையையும் இவர் இழக்க செய்வதாக கூறியுள்ளார்.
எனவே நாடாளுமன்ற விடயங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதால் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் சபாநாயகரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மொழி ஊடக இணைப்பாளர் தா.க ஐன்ஸ்டீன் கூறியுள்ள முழுமையான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்...,
