டொலர் பத்திரக்காரர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்
அமெரிக்க டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம், பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவர்களுடன் இரண்டு மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
டொலர் பத்திரக்காரர்களுடன் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இன்னும் இலங்கை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட 13 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பது குறித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை கூடிய விரைவில் முடிவுறுத்த வேண்டும் என்று தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து நிறைய ஆர்வம் உள்ளது.
கருத்து வேறுபாடுகள்
எனினும் செயல்முறை காரணமாக அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சாம்பியா மற்றும் பிற நாடுகளும் இன்னும் தங்கள் கடன்களை மறுகட்டமைப்பதில் தாமதத்துடன் போராடி வருகின்றன.
பீஜிங்கிற்கும் மற்ற கடன் வழங்குநர்களுக்கும் இடையே கடன் நிவாரணம் குறித்த கருத்து வேறுபாடுகளே இதற்கான காரணமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
