அதீத கடன் சுமையால் ஏலத்திற்கு சென்ற வீடு : தம்பதியின் விபரீத முடிவு
குருணாகல் பிங்கிரிய - வீரபொகுன பகுதியில் ஒரு தம்பதியினர் கடன் சுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடு காணிகள் அடமானத்தில் வைத்து கடன் பெற்ற நிலையில் அவை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற கடனையும் அடைக்க முடியாமல் போயுள்ளது.
தம்பதி விபரீத முடிவு
இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதியினர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
வீரபொகுன-இஹல கொங்கந்தவைச் சேர்ந்த சுசந்த சிசிர குமார (42) என்ற கணவன் மற்றும் நிர்மலா சாந்திலதா தமயந்தி (40) என்ற மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து விஷமருந்தி உயிரை மாய்த்துள்ளனர்.
கடன் சுமை
பிரேத பரிசோதனையின் போது, இருவரும் ஏற்கனவே உயிரை மாய்க்க முயன்றதாகவும், அவர்களின் சகோதரி கடனில் ஒரு பகுதியை அடைத்து அவர்களை ஆபத்திலிருந்து விடுவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
